’மெர்சல்’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் நடிகராகியுள்ள விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ரஜினி, கமல் வரிசையில் விஜயும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வந்தவர், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியையும் முடக்கிவிட்டுள்ளார்.
விஜயின் ரசிகர்களும் தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, சில போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்தும் விஜய் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிதான் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை திடீரென்று சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது விட்டில் ரசிக மன்ற நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
விஜயின் இந்த சந்திப்புக்கு பின்னால் அரசியல் இருக்கிறது என்றும், அவரது பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...