தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ள சிவகார்த்திகேயனின் படங்களில் பாடல்களும் செம ஹிட்டாகியுள்ளது. அதிலும், அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணி என்றால் அந்த பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது உண்டு. ஏன், சிவகார்த்திகேயனே தனது வளர்ச்சியில் அனிருத்துக்கும் முக்கிய பங்கு உண்டு என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளது.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் தற்போது நடிக்க இருக்கும் புதிய படங்களில் அனிருத் இல்லாமல் வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கும் விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.
இதனால், அனிருத்தை சிவகார்த்திகேயன் கழட்டிவிட தொடங்கிவிட்டதாக பேச்சு அடிபடுகிறது. தனுஷுக்கும் அனிருத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்ட போதும், அனிருத்துடன் நெருக்கமாக இருந்த சிவகார்த்திகேயன், தற்போது அனிருத்தை நிராகரிப்பதால், இவரகளுக்கு இடையேயும் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரமாண்ட படைப்பில் இணைந்துள்ளார்...
சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி’...
இந்திய இசையை உலக அரங்கில் நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றிய ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வென்ற இசைப்புயல் ஏ...