அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, அறம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்தவரும் வெற்றிவேல், சிவலிங்கா வெற்றிபடங்களை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன் தனது புதிய பயணத்தை துவங்கவிருக்கிறார்.
’மிட்டா’ (Mitta) எனப்பெயரிடப்பட்டுள்ள புதிய Web Series ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கின்றார். டி.பி.பிரதிப் இத்தொடரை இயக்க, அரவ விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கின்றார்.
பாரிஜாதம், போடா போடி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தரண், இந்த வெப் தொடருக்கு இசையமைக்கின்றார்.
நடிகர் நடிகையர் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...