நயந்தாரா மற்றும் திரிஷா இருவரும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், இதுபோன்ற கதைகள் வைத்திருக்கும் இயக்குநர்களிடம் கதை கேட்க உடனடியாக ஓகேவும் சொல்கிறார்களாம். இவர்களது பாணியில் மேலும் சில நடிகைகளும் பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், அந்த வரிசையில் ஹன்சிகாவும் இணைந்துள்ளார்.
சமீபகாலமாக சரியான வாய்ப்புகள் இன்றி இருந்த ஹன்சிகா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜாலியான கேரக்டரில் நடித்து வந்தவர், இந்த படத்தின் மூலம் மிக சவாலான வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக தற்போது ஹோம் ஒர்க் செய்து வருபவர், இந்த படத்தில் தனது பவர் புல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறாராம்.
மசாலா படம், ரோகியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய ஜமீல், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் ஜமீல், “ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறோம். மிகுந்த பொறுப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிற இந்த கதாபாத்திரத்துக்கு முதன்மையான தேர்வாக ஹன்சிகா இருந்தார். பெருகி வரும் நாயகிகளை மையப்படுத்திய கதைகள் ட்ரெண்டும், ரசிகர்கள் மத்தியில் குறையாத ஹன்சிகாவின் புகழும் தான் இந்த படம் உருவாக முக்கிய காரணம். அவருடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அவர் என்னை ஈர்த்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ இந்த கதையை எழுதும்போதே அவரின் இமேஜ் இந்த கதையில் பொருந்தி விட்டது. இந்த கதையில் இன்னும் சில கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அதற்காக பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம். ஜியோஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் வர்மா சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.” என்று தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...