திரு இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாக பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகளில் ரெஜினாவின் கவர்ச்சியான அழகு பெரிதும் பேசப்படும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இதே படத்திற்காக ரெஜினா தனது சினிமா பயணத்தில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளார். ஆம், இப்படத்திற்காக ரெஜினா தனது சொந்த குரலில் முதல் முறையாக டப்பிங் பேசியிருக்கிறார். ரெஜினாவின் இந்த முயற்சியை படக்குழுவினர் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செழியன் இது குறித்து கூறுகையில், “ரெஜினா இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவர் தமிழ் ஸ்க்ரிப்டை படித்ததும், தமிழில் அவரின் மொழி ஆளுமையையும் கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டோம். அவர் நம்ம ஊரு சென்னை பொண்ணு, சென்னையில் தான் கல்லூரி படிப்பையும் முடித்தார். அவரிடம் ஏன் இதற்கு முன்பு சொந்த குரலில் டப்பிங் பேசவில்லை என்று கேட்டபோது, யாரும் டப்பிங் பேச என்னை இதுவரை அணுகவில்லை என்றார். ரெஜினா சொந்த குரலில் டப்பிங் பேச இயக்குநர் திரு வாய்ப்பு அளிக்க, ரெஜினா எந்த குறையும் இல்லாமல் பேசி, அவரின் மொழி ஆளுமையால் எங்களை பிரமிக்க வைத்தார். அவரின் கேரக்டருக்கு அவரே டப்பிங் பேசியதன் மூலம், கதாபாத்திரம் முழுமை அடைந்தது.” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...