அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருக்கிறார். சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தை விஷால் பிலிக் பேக்டரி நிறுவனம் தயாரித்திருக்கிறது.
வரும் மே 11 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. வெளியான ஒரு சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்த இந்த டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராணுவ பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அர்ஜுனுக்கும், விஷாலுக்கும் இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சி இருக்கும் என்பது டிரைலரிலேயே தெரிவதோடு, ராணுவ வீரர்கள் பற்றியும், விவசாயம் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. அத்துடன், வயதானவர் ஒருவர் நானும் ஆர்மி தான், என்று கூற, விஷால் அப்படியா நீங்களும் ஆரியா? என்று கேட்க, அதற்கு அந்த பெரியவர் ‘ஓவியா ஆர்மி’ என்று பதில் அளிக்கிறார். ஆக, படத்தில் எதார்த்தமான காமெடியும் இருக்கும். மொத்தத்தில் அனைத்து அம்சங்களும் நிறைந்த ‘இரும்புத்திரை’ நிச்சயம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்பதை டிரைலரே நிரூபித்துவிட்டது.
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் (BTG Universal) நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, நடிகர் அருண் விஜய் நடிப்பில், ’மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’ரெட்ட தல’...