’என் காதலி சீன் போடுறா’ என்ற வித்தியாசமான தலைப்பில், உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சங்கர் மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ஜோசப் பேபி தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்சேவா இயக்குகிறார். இவர் ராமகிருஷ்ணன் நடித்த ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியுள்ளார்.
வெங்கட் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைக்கிறார். ராம்சேவா, ஏகாதசி ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றன. அன்பு கலையை நிர்மாணிக்க, சாண்டி மற்றும் டி.முருகேஷ் நடனம் அமைக்கின்றனர். மிரட்டல் செல்வா ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, மாரி எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை தண்டபாணி கவனிக்கிறர்.
இப்படம் குறித்து கூறிய இயக்குநர் ராம்சேவா, “இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.
படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.” என்றார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. இதில் ஹீரோ மகேஷ், ஹீரோயின் ஷாலு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்க, சிறப்பு விருந்தினராக பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பங்கேற்று படப்பிடிப்பு தொடங்கி வைத்தார்.
2026 பொங்கல் வெளியீடாக வரும் விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி படங்களோடு ராட்ட திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது...
’பழைய வண்ணாரப்பேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன்...
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...