குடும்ப பாங்கான வேடங்களுக்கு பொருத்தமான நடிகை என்று பெயர் எடுத்த சினேகா, முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் ஒரு சில படங்களில் நடித்தவர், குழந்தை பிறப்பால், நடிப்பதை தவிர்த்து வந்தார்.
தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள அவர், சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடித்திருந்தார். ஆனால், தான் நடித்த ஏகப்பட்ட காட்சிகளை இயக்குநர் வெட்டி விட்டார் என்றும், தனக்கு சொன்ன கதை ஒன்று, திரையில் அவர் காட்டியது வேறு, என்னை ஏமாற்றிவிட்டார்கள், என்று கூறி வருத்தப்பட்டார்.
மேலும், ‘வேலைக்காரன்’ படத்திற்காக தனது உடல் எடையை அதிகரித்திருந்த சினேகா, உடல் உடை கூடியதால் பட வாய்ப்புகள் வராமல் இருப்பதை உணர்ந்தவர், கடந்த பல மாதங்களாக உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த நிலையில், உடலை ஸ்லிம்மாக்கியுள்ள சினேகா, அப்படியே தனது கூந்தலையும் பாதியாக வெட்டிக் கொண்டிருக்கிறார். அவரது இந்த புதிய தோற்றத்தின் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார்கள்.

நீளமான தலைமுடி கொண்ட சினேகாவுக்கு மாடர் உடைகளை விட புடவை தான் அழகு என்று கூறும் ரசிகர்கள், “ஏன் இந்த திடீர் மாற்றம்?” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...