ஜே.எஸ் பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பில், ஜே.சதீஷ்குமார் தயாரிப்பில், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறுகையில், “தரமான குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் இனி வருமா என்ற சந்தேகம் சமீபமாக திரை அரங்குக்கு செல்லும் ரசிகர்களுக்கு மேலோங்கி வருகிறது. அந்த அச்சத்தை ஜூன் 29 ஆம் தேதி வெளி வரும், ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வெளி வரும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம் நீக்கும்.
’அண்டாவ காணோம்’ நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம்.
குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன் படியே தான் பணியாற்றி வருகிறேன். என் தயாரிப்பில், அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘அண்டாவ காணோம்’ என் கூற்றை நிரூபிக்கும்.
இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கப்படும் படங்கள், ‘அண்டாவ காணோம்’ போன்ற தரமான படங்கள் தொடர்ந்து வெளி வரும் பட்சத்தில் இருட்டில் கரைந்து விடும்.” என்று தெரிவித்தார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...