Latest News :

வித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் ‘பாண்டி முனி’
Wednesday May-09 2018

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘3’ போன்ற படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன் தற்போது தயாரிக்கும் படம் ‘பாண்டி முனி’.

 

இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் முனி என்ற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நிக்கிஷா பட்டேல் நடிக்க இவர்களுடன் பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

மது அம்பாட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, ஸ்ரீமான் பாலாஜி கலையை நிர்மாணிக்க, சிவசங்கர் நடனம் அமைக்கின்றார். சூப்பர் சுப்பராயண் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சுரேஷ் அர்ஸ் எடிட்டிங் செய்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறுகையில், “இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன். சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி

 

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது. சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்கு இருக்கும்.

 

இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.

 

படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.” என்றார்.

 

இப்படம் கஸ்தூரி ராஜாவின் 23வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2586

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery