Latest News :

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகும் ‘எம்பிரான்’
Wednesday May-09 2018

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கும் படம் ‘எம்பிரான்’. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிருஷ்ண பாண்டி இயக்குகிறார். இவர் ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மகிழ்திருமேனியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய ’நினைத்தது யாரோ’ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

 

‘யாகாவாராயினும் நா காக்க’ படத்திற்கு பின்னணி இசையமைத்த பிரசன் பாலா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் படத்தொகுப்பு செய்ய, மாயவன் கலையை நிர்மாணிக்கிறார். டான் அசோக் சண்டைப்பயிற்சியை கவனிக்க, தீனா மற்றும் விஜி நடனம் அமைக்கின்றனர்.

 

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி  மற்றும் ஹைதராபாத்தில்  நடந்துமுடிந்து. ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Related News

2588

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery