கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமான நந்திதா, ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தாலும், நந்திதா இன்னமும் வளரும் நடிகையாகவே இருக்கிறார்.
இந்த நிலையில், 7 வயது பையனுக்கு நந்திதா அம்மாவாக உள்ளார். ஆம், புதுமுக இயக்குநர் கீதா ராஜ்புட் என்பவர் இயக்கும் புதிய படம் ஒன்றில், நந்திதா அம்மா வேடத்தில் நடிக்கிறார். ரினேஷ் என்ற 7 வயது சிறுவன் நந்திதாவின் மகனாக நடிக்கிறார்.
நந்திதாவை சுற்றி நகரும் கதையில் விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு 15 ஆம் தேதி முதல் தேதி துவங்குகிறது.
பாலா உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ள கீதா, இந்த வேடத்திற்காக நந்திதாவை 8 கிலோ எடையை குறைக்க வைத்துள்ளாராம். நந்திதாவின் கதாபாத்திரம் சவாலானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்குமாம். அதனால், இந்த படம் நந்திதாவுக்கு திருப்புமுனையாக இருக்குமாம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...