நயந்தராவுடன் காதல் கொண்ட பிரபு தேவா, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், நயந்தராவின் காதலையும் வெட்டி விட்டார். அதன் பிறகு படம் இயக்குவதில் பிஸியான அவர் வேறு ஒரு நடிகையுடன் காதல் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது, படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் பிரபு தேவா, வளர்ந்து வரும் நடிகை ஒருவருடன் காதல் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் நிகிஷா பட்டேல், பிரபு தேவாவை திருமணம் செய்துகொள்ள தான் தயாராக இருப்பதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ‘பாண்டி முனி’ படத்தில் நடிக்கும் நிகிஷா பட்டேல், அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு நிருபர்களிடம் பேசுகையில், “தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன்.

ஹீரோக்களில் பலரின் நடிப்பு எனக்கு பிடிக்கும். குறிப்பாக பிரபுதேவாவை மிகவும் பிடிக்கும். அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் நட்பாக பழகுகிறோம். பிரபுதேவாவுடன் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். அவரை திருமணம் செய்துகொள்ளவே நான் தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...