Latest News :

அரசியல் களத்தில் ஜூலி - எந்த கட்சியில் சேரப்போகிறார் தெரியுமா?
Sunday May-13 2018

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடம் பிரபலமான ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மேலும் பிரபலமாகிவிட்டார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகை என்று வலம் வரும் ஜூலி, சென்னையின் வி.ஐ.பி-க்களில் ஒருவராகவும் உள்ளார்.

 

கடை திறப்பு, கல்லூரி விழாக்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளும் ஜூலி, விளம்பரப் படங்களில் நடிப்பதோடு, சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். 

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடம் நல்ல பெயர் எடுத்த ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு கிடைத்த பிரபலத்தால் லட்சக் கணக்கில் பணத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பது தான் உண்மை.

 

இந்த நிலையில், ஜூலி அரசியல் களத்திலும் இறங்க இருக்கிறாராம். விரைவில் அவர் தனி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக சமூக வலைதளங்களில் சிலர் தகவல் பரப்பி வருகிறார்கள். ஆனால், அது வெறும் வதந்தியே. அதே சமயம், ஜூலிக்கு அரசியல் ஆசை இருப்பது உண்மை தன் என்றும், அவர் கமல் ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் சேருவதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாக, அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Related News

2605

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery