Latest News :

மே 25 ஆம் தேதி வெளியாகும் ‘அபியும் அனுவும்’!
Monday May-14 2018

விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை இன்னொருவரிடம் இழக்கும் போது, அதை விடவும் இழப்பதற்கு இந்த உலகில் ஒன்றும் இல்லை. ஒரு பெண் இயக்குனர் காதல் கதை எழுதும்போது அதனுள் ஆழமான எமோஷன் இருக்கும். அபியும் அனுவும் படத்தின் விளம்பர காட்சி ப்ரோமோ மற்றும் பாடல்கள் அதை பறை சாற்றுகின்றன. இயக்குனர் பிஆர் விஜயலக்‌ஷ்மி தனிச்சிறப்புடைய காதலை அழகுபடுத்தி படத்தில் காட்டியிருக்கிறார்.

 

"அபி (டொவினோ தாமஸ்) மற்றும் அனு (பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது. கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொறுத்தி பார்த்தேன். அந்த கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள்" என்கிறார் விஜயலக்‌ஷ்மி. 

 

மேலும் படத்தின் இசை நல்ல வரவேற்பு பெற்றதை பற்றி அவர் கூறும்போது, "தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்கள் இசையமைப்பதில் திறமை வாய்ந்தவர். அவரது அனைத்து படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக் கூடிய வகையில் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்க வைக்கிறது. தரண் இசை மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும்போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது" என்றார்.

 

படத்தில் வசனம் எழுதியிருக்கும் கே சண்முகம் அவர்களை மறக்காமல், அவரை பற்றி கூறும்போது, "கதாபாத்திரங்கள் சண்முகம் எழுதிய வசனங்களோடு சேர்ந்த பின்பு தான் முழுமையடைந்தது. அந்த வகையில் சண்முகம், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரது வசனங்களால் இன்னும் வலிமையாக்கி கொடுத்தார்" என்றார்.

 

அபியும் அனுவும் படத்தை சரிகம ஃபிலிம் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான யூட்லீ ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. வரும் மே 25ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

Related News

2613

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery