Latest News :

திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்! - ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது
Monday May-14 2018

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

 

இது தொடர்பாக தேர்தல் ஆணையரும், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.என்.பாஷா கூறுகையில், “தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது தொடர்பாக, சங்க உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த 7 ம் தேதி அன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூன் 10 ம் தேதி தேர்தலை நடத்துவது எனவும் அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை நடத்துவது எனவும், தேர்தலை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் நடத்துவது எனவும் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

 

மேலும் 21 ம் தேதி முதல் 25 ம் தேதிக்குள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும். 28 ம் தேதி மாலை 4 மணிக்குள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்ற உறுப்பினர்கள் புகைப் படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மொத்தம் 1560 உறுப்பினர்கள் உள்ளனர்.” என்று தெரிவித்தார்.

Related News

2614

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery