கடந்த ஆண்டு வெளியான ‘மெசல்’ படத்தின் மூலம் நடிகர் விஜய் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். படத்தில் பேசப்பட்ட அரசியல் வசனங்களால் பெரும் சர்ச்சை எழுந்தாலும், அதுவே படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது என்றும் சொல்லலாம்.
படம் ரிலீஸுக்கு முன்பாகவே பல சாதனைகளை நிகழ்த்திய ‘மெர்சல்’ ரிலிஸுக்கு பிறகு பாக்ஸ் ஆபிஸில் ரூ.250 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. பாடல்கள், டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை என பலவற்றி பல சாதனைகளை படைத்து வந்தது.
இந்த நிலையில், படம் வெளியாகி ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும், ‘மெர்சல்’ படத்தின் சாதனைகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இணையளத்தில் பல சாதனைகளை செய்த ஆளப்போறான் தமிழன் பாடல், தற்போது 45 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...