மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ’செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்து வந்த அருண் விஜய், தனது போஷன் அனைத்தையும் முடித்துவிட்டு அப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். தற்போது, பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘சாஹோ’ படத்தில் அருண் விஜய் இணைந்துள்ளார்.
‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ஷரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் எமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே, அருண் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அபுதாபியில் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில், அருண் விஜய்யும் தற்போது இணைந்திருக்கிறார்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...