பிரபல எழுத்தாளரும், திரைப்பட கதையாசிரியமருமான பாலகுமாரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.
‘இரும்புக்குதிரைகள்’ நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்களிடம் பிரபலமானவர் பாலகுமாரன். பிரபல மாத இதழ், வார பத்திரிகைகளில் பல கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளை எழுதியும் பிரபலமடைந்தார்.
கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளவர், தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பாலகுமாரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பிற்பகல் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...