சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், முதல்வராக பதவி ஏற்று ஆட்சியமைக்கப் போவது யார், என்பது பெரும் எதிப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமிக்கும், எடியூரப்பாவுக்கும் தான் கடும் போட்டி நிலவுகிறது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராக மட்டும் அன்றி, அம்மாநிலத்தின் செல்வந்தர்களில் ஒருவராக விளங்கும் குமாரசாமி, மீண்டும் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குமாரசாமி குறித்த பல தகவல்கள் கசிய தொடங்கியுள்ளது. அந்த வரிசையில், அவர் நடிகை தமன்னாவுக்காக பல கோடிகளை செலவு செய்த தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரசாமியின் மகன் நிகில் கெளடா, கடந்த ஆண்டு வெளியான ‘ஜாகுவார்’ என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தனது மகனுக்காக பல கோடிகளை செலவு செய்து அப்படத்தை தயாரித்த குமாரசாமி, அப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நடிகை தமன்னாவை ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்தார். அதற்காக அவருக்கு ரூ.2 கோடியை சம்பளமாக அவர் கொடுத்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...