Latest News :

பூமிக்கு மேல் மற்றும் பூமிக்கு கீழ்! - வித்தியாசமான படப்பிடிப்போடு உருவாகியுள்ள ‘ஆண்டனி’
Wednesday May-16 2018

ஆண்டனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், குட்டி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆண்டனி’. ’சண்டக்கோழி’ புகழ் லால் முக்கிய வேடத்தில் நடிக்க, நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், வெப்பம் ராஜசேகரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

19 வயது இளம்பெண் ஷிவாத்மிக்கா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் நடிகை ஜெயசித்ரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டனர்.

 

விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர், “இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நடிகை ஜெயசித்ரா பேசுகையில், “படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர். இந்த படம் மாபெரும் வெற்றியடைய  வேண்டும் தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

வெப்பம் ராஜா பேசுகையில், “படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர். இயக்குநர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார். 19 வயது  உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார். PC ஸ்ரீ ராம் அவர்களைப்போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம். கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார். ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண்ண முடியும். மிக சிறப்பாக செய்து உள்ளார்.” என தெரிவித்தார்.

 

ரேகா பேசும் போது, “மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும்.ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை.” என்றார்.

 

விழாவில் இயக்குநர் குட்டி குமார் பேசும் போது, “இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி. இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல் மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

 

உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். மேலும் படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது. ரொம்ப நன்றாகவே மியூசிக் பன்னிருக்காங்க.” என்று தெரிவித்தார்.

 

இசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசுகையில், “படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி. இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம். வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

Related News

2629

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...