Latest News :

மே 25 ஆம் தேதி ரிலீஸாகும் ‘திருப்பதிசாமி குடும்பம்’
Thursday May-17 2018

ஜெம்ஸ் பிக்சர்ஸ்  முருகானந்தம்.ஜி, ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா  இணைந்து வழங்கும் படம் ‘திருப்பதிசாமி குடும்பம்’.

 

இந்த படத்தில் ஜே.கே, ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவு - ஒய்.எம்.முரளி, இசை   -  சாம் டி.ராஜ், எடிட்டிங்   -  ராஜா முகமது, நடனம் - தினேஷ், ஹபீப், ஸ்டன்ட் - பயர் கார்த்திக், இணை தயாரிப்பு  -  திருப்பூர் கே.எல்.கே.மோகன், தயாரிப்பு - பாபுராஜா, பி.ஜாஃபர் அஷ்ரப்.

 

இப்படத்தை இயக்கியிருக்கும் சுரேஷ் சண்முகம், சரத்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற ‘அரசு’, ‘கம்பீரம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

 

படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறுகையில், “ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை.

 

அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரும் புத்திசாலித் தனமாக பிரச்சினைகளை சமாளித்து  எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் கதை.

 

காக்கா முட்டை, பசங்க, கோலிசோடா வரிசையில் ’திருப்பதி சாமி குடும்பம்’ வெற்றி பெற்று பாராட்டை பெரும்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

 

இப்படம் இம்மாதம் (மே) 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related News

2634

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...