‘எமன்’, ‘சைத்தான்’, ‘அண்ணாதுரை’ என்று தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் படம் என்றாலே வியாபாரிகள் தெறித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடைசியாக வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் அடிமட்ட தோல்வியால் விஜய் ஆண்டனி படங்களுக்கு இருந்த துளியளவு மவுசும் காணாமல் போய்விட்டது.
இதனால், எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் விஜய் ஆண்டனி, தான் எதிர்ப்பார்த்த வியாபாரம் ஆகாததால் ‘காளி’ படத்தை சொந்தமாக வெளியிடும் முடிவுக்கு வந்தார். படம் நாளை வெளியாகும் நிலையில், படம் குறித்து கோலிவுட்டில் கசியும் தகவல்கள் விஜய் ஆண்டனியை கவலை அடைய செய்திருக்கிறது.
ஆம், விஜய் ஆண்டனியின் தொடர் தோல்விப் படங்களில் இடம்பெறும் அளவுக்கு தான் ‘காளி’ இருக்கிறதாம். ஓபனிங் உள்ள நடிகராக இருந்தாலாவது படம் வெளியான இரண்டு நாட்களில் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், விஜய் ஆண்டனியை பொருத்தவரை படம் நல்லா இருந்தால் தான் ஓடும், என்ற நிலை இருப்பதால், ’காளி’ யும் அவரது காலை வாரிவிட்டுவிடும், என்றே கூறப்படுகிறது.
’காளி’ படத்தின் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களின் கருத்தாக இது இருந்தாலும், ரசிகர்களின் கையில் தான் படத்தின் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது. அதனால், காளி உண்மையிலேயே விஜய் ஆண்டனியின் காலை வாரிவிட்டு விடுமா அல்லது அவரை காப்பாற்றுமா, என்பதை நாளை பார்ப்போம்.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...