Latest News :

’மெர்சல்’ படத்திற்காக போட்டி போடும் டிவி சேனல்கள்!
Saturday August-19 2017

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, சமூக வலைதளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படமாகும்.

 

விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதை சன் டிவி மற்றும் சன் மியூசிக் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்வதோடு, யூடியுபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப் போகிறார்களாம்.

 

இதற்கிடையே, ‘மெர்சல்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்கு இரண்டு முன்னணி சேனல்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறதாம். சன் டிவி பெரிய தொகை கொடுக்க தயாராக இருக்க, அவர்களை விடவும் பெரிய தொகை கொடுத்து ‘மெர்சல்’ படத்தை வாங்க ஜீ தமிழ் முன் வந்துள்ளதாம். இதன் காரணமாக இதுவரை சாட்டிலைட் உரிமை விற்கப்படாமல் இருக்கிறது.

 

இந்த இரண்டு சேனல்களில் யார் பெரிய தொகை கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே ‘மெர்சல்’ சாட்டிலைட் உரிமை கொடுக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் கூறுகின்றன.

Related News

264

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery