Latest News :

சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா!
Friday May-18 2018

‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்திற்கு இசையமைப்பதோடு, தயாரிக்கவும் செய்யும் யுவன் ஷங்கர் ராஜா, தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கும் ‘பேய் பசி’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசையமைத்து, பாடி, நடனமும் ஆடியிருக்கிறார். அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவினயம் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் ‘சூது கவ்வும்’, ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

 

யுவனின் நடத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “இந்த படம் ஒரு திரில்லர் படம். திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம். இந்த கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம். பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால்  அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்து விட்டது. ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது ‘பேய் பசி’ படத்துக்கு மிக பெரிய பலம்.

கதா நாயகன் ஹரி கிருஷ்ண பாஸ்கர் உடன் விபின், நமிதா, கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்து உள்ளனர்.” என்றார்.

Related News

2640

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

மே 15 ஆம் தேதி வெளியாகும் ‘எக்ஸாம்’ (Exam) தொடர்!
Monday April-27 2026

வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...

Recent Gallery