ரேடியோ ஜாக்கியாக பிரபலமான ஆர்.ஜே.பாலாஜி, 2015 ஆம் ஆண்டு சென்னை மழையின் போது, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதையடுத்து சிறு சிறு வேடங்களில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைத்தது.
மணிரத்னம் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடங்கிய அவர், தற்போது ஹீரோவாக களம் இறங்குகிறார்.
‘எல்.கே.ஜி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பிரபு என்பவர் இயக்குகிறார். அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். விது அய்யன்னா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
அரசியலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் அரசியல்வாதி கெட்டப்பில் இருக்கும் பாலாஜி, கூடவே டீ கடை மாஸ்டர் கெட்டப்பிலும் இருக்கிறார்.
மொத்தத்தில், அரசியல்வாதி ஒருவரை கலாய்க்கும் விதமாகவே இப்படம் உருவாகிறது என்பது போஸ்டரை பார்த்தாலே தெரிகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...