Latest News :

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விஜய் வசந்துக்கு பிரபலங்கள் வாழ்த்து!
Sunday May-20 2018

நடிகரும், திரைப்பட தயாரிப்பாளாருமான விஜய் வசந்த், இன்று தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

2007 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் வசந்த், ’நாடோடிகள்’, ‘என்னமோ நடக்குது’, ‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’, ‘அச்சமின்றி’, ‘சென்னை 600028-2’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்ததோடு, இரண்டு திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டுப் பெற்றவர், தற்போது ‘மைடியர் லிசா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

 

இன்று (மே 20) 35 வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய் வசந்துக்கு சினிமா பிரபலங்கள் பலர் போனிலும், சமூக வலைதளம் மற்றும் நேரிலும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கும் ‘மைடியர் லிசா’ திரைப்படக் குழுவினரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, விஜய் வசந்தின் பிறந்தநாளையொட்டி, ‘மைடியர் லிசா’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். 

 

ஸ்ரீநிதி பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்கத்தில் உருவாகும் ‘மைடியர் லிசா’ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related News

2654

’படையாண்ட மாவீரா’ படத்தை வீழ்த்த பலர் மறைமுகமாக செயல்படுகிறார்கள் - இயக்குநர் வ.கெளதமன் வருத்தம்
Wednesday September-10 2025

வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

Recent Gallery