’இரும்புத்திரை’ படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரவேற்பால் விஷால் மகிழ்ச்சியடைந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இரும்புத்திரை’ வசூலிலும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து ‘சண்டக்கோழி 2’-வில் பிஸியாக இருக்கும் விஷால் விநாயகர் சதுர்த்தியன்று அப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.
‘சண்டக்கோழி 2’ படத்திற்குப் பிறகு விஷால் நடிக்க இருக்கும் படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. தலைப்பை கேட்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு தலைப்பை விஷால் தேர்வு செய்துள்ளார். ‘அயோக்கிய’ என்பது தான் படத்தின் தலைப்பு. இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றிப் பெற்ற ‘டெம்பர்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களை இயக்கிய லக்ஷ்மண் இயக்குகிறார். ஒரு கெட்ட போலீஸ் தனது காதலிக்காக நல்ல போலீசாக மாறுவது தான் இப்படத்தின் கதை.
வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் வ...
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...