பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு, கடை திறப்பு, கல்லூரி நிகழ்ச்சி என்று பிஸியாகவும் இருக்கிறார். இதற்கிடையே, விரைவில் தான் ஒரு அரசியல் கட்சியை தொடங்கப் போவதாக வீடியோ ஒன்றை ஜூலி வெளியிட்டுள்ளார். இதுபோல ஜூலி இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், ”ஜூலியுடன் நீங்கள் அரசியலுக்கு வந்தால் உங்களை முதல்வராக்குவோம்” என்று நடிகை கஸ்தூரியிடம் ரசிகர்கள் சிலர் டிவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
ஜூலியின் ஆதரவாளர்களின் இத்தகைய ட்விட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள கஸ்தூரி, ”தலைவி ஜூலியுடன் இணைந்து பணியாற்றும் அளவுக்கு எனக்கு தகுதியோ அனுபவமோ இன்னும் வரவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொண்டு”என்று தெரிவித்துள்ளார்.
ஜூலியை கஸ்தூரி இப்படி கலாய்த்ததற்கு, ஜூலி ரசிகர்கள் ரொம்பவே கோபமடைந்ததோடு, ஆளாளுக்கு எங்கள் தலைவியை கலாய்க்கிறீர்கள், பிச்சுப்புடுவோம் பிச்சு, என்று தெரிவித்துள்ளனர். அதே சமயம், ஜூலியை கலாய்த்த கஸ்தூரியை சிலர் பாராட்டியும் வருகிறார்கள்.
கஸ்தூரியின் இந்த மரண கலாய்ச்சலுக்கு ஜூலி பதிலடி கொடுப்பாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...