ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார்.
இப்படம் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் 15 வது திரைப்படம். கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் - முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.
இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய ரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்ய உள்ளார். கதாநாயகி, இதர கதாபாத்திரங்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களின் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’...
மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’...
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படங்களாக மாறிவரும் வரிசையில் தற்போது அவர் எழுதிய ’கசிவு’ என்கிற நாவல் அதே பெயரிலேயே திரைப்படமாக உருவாகியுள்ளது...