காமெடி வேடங்களில் நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, ‘எல்.கே.ஜி’ படம் மூலம் ஹீரோவாவதுடன், இயக்குநராகவும் அறிமுகமாகிறார். அரசியல் நையாண்டுப் படமான இப்படத்தில் பிரபல அரசியல்வாதியும், இயக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இப்படம் குறித்து கூறிய ஆர்.ஜே.பாலாஜி, “இன்றைய இளைஞர்கள் வாழ்வில் அரசியல் என்பது இன்றி அமையாதது ஆகும். நிமிடத்துக்கு நிமிடம் "பிரேக்கிங் நியூஸ்" என்னும் கால கட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல்வாதிகளின் பின் புலத்தையும் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் ‘எல் கே ஜி’.
நாஞ்சில் சம்பத் சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு கால கட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். எனது நீண்ட நாள் தோழியான இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டி தந்த பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது. லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க, ’மேயாத மான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும்.” என்றார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...