நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் ‘வேலன் எட்டுத்திக்கும்’ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - எம்.சுகுமார், இசை - ஜி.வி.பிரகாஷ் குமார், பாடல்கள் - கானாபாலா, கவிதா தண்டபாணி, எடிட்டிங் - எஸ்.என்.பாசில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பி.சமுத்திக்ரகனி.
இன்று ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ் நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் இதில் ஜெயித்தானா என்பது தான் ‘வேலன் எட்டுத்திக்கும்’ படத்தின் கதை.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...
டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...