துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து பல்வேறு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர மரணம் கொலை அல்ல என்று துபாய் போலீசார் தெரிவித்தாலும், பல்வேறு தகவல்களும், வதந்திகளும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
டெல்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான வேத் பூஷன், தனது தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை தான், என்று வேத் பூஷன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய தகல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஸ்ரீதேவியின் மரணத்தில், மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமானது என்றும், அதனால் தாவூதிற்கு இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் வேத் பூஷன் கூறியுள்ளார்.
மேலும் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக துபாய் காவல்துறை பிரதேச பரிசோதனை அறிக்கை மட்டுமே தந்துள்ளதாகவும், ஸ்ரீதேவியின் ரத்த மாதிரி, நுரையீறலில் தங்கிய நீரின் அளவு போன்ற எந்த தகவல்களையும் அந்நாட்டு போலீஸார் தரவில்லை, என குற்றம் சாட்டுவதோடு, தயாரிப்பாளர் விகாஸ் சிங், ஓமன் நாட்டில் ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி காப்பீடு இருப்பதாகவும், காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும். அதனால் பணத்திற்காக ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி மரணம் குறித்து வேத் பூஷன் வெளியிட்டு வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு, இதுபோன்ற தகவல்களால் ஸ்ரீதேவியின் குடும்பத்தார் பெரும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் - தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் - ஊடகவியலாளர்களை சந்தித்தார்...
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...