கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள ‘பிக் பாஸ் 2’ தொலைக்காட்சி நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகம் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பிக் பாஸ் 2 வில் போட்டியாளர்களாக யார் யார், பங்கேற்க போகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ள மக்கள் ரொம்பவே ஆவலோடு இருக்கிறார்கள்.
பிக் பாஸ் 2-வின் போட்டியாளர்கள் பட்டியல் என்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் பட்டியல் ஒன்று பரவியது. ஆனால் அது போலியான பட்டியல் என்று பிறகு தெரிய வந்தது.
இந்த நிலையில், கமல்ஹாசனின் முன்னாள் காதலியான பிரபல நடிகை சிம்ரன், பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், அஜித் என்று பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டிருக்கும் சிம்ரன், கெளதமிக்கு முன்பாகவே கமல்ஹாசனுடன் வாழ்ந்து வந்தவர். பிறகு கமலை பிரிந்து விட்ட, அவர் தீபக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு நடிப்பதை தவிர்த்து வந்தார்.

தற்போது, மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் சிம்ரன், ரஜினிகாந்தின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...
வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A...