தமிழகம் மட்டும் இன்றி, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகராக திகழும் விஜயின், ‘மெர்சல்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டாலும், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இங்கிலாந்து நாட்டின் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ‘மெர்சல்’ படம் வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த நிலையில், இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு விஜய் அவார்ட்ஸ் இந்த வாரம் ஞாயிறு அன்று நடக்கவுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் விருதுகள் பெறுபவர்களை தேர்வு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும், பேவரட் நடிகர், நடிகைகள் என்ற விருது மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான பேவரட் நடிகர் விருதுக்கு ‘மெர்சல்’ படத்திற்காக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல விருதுகளையும், கெளரவங்களையும் பெற்று வரும் விஜய், தற்போது மற்றொமொரு கெளரவத்தையும் பெற இருப்பதால், அன்றைய தினம் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...