சென்னை,மார்ச் 29 : ஏழை மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் விஷால், நலிவடைந்த துயரத்தில் உள்ள சில திரையுலக கலைஞர்களுக்கும் தனது அறக்கட்டளை மூலம் பல உதவிகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ‘ரத்தகண்ணீர்’, ‘தூக்குமேடை’, ‘பேசும் தெய்வம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியவரும், “நூறாண்டு காலம் வாழ்க...நோய் நொடி இல்லாமல் வளர்க...” என்ற மெகாஹிட் பாடலை பாடியவருமான பாடகி சரளா அம்மா, மற்றும் அவர்களுடைய இரண்டு பெண்கள் ஆதரவின்றி அன்றாட வாழ்வதற்கே திண்டாடி வருவதாக, பத்திரிகை செய்தி மூலம் அறிந்த விஷால், அவர்களை தொடர்பு கொண்டு, ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலமாக மாதம் ரூ.5 ஆயிரம் தருவதாக தெரிவித்ததோடு, அவர்களுக்கான மருத்துவ உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் ஜெ.கே.சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’...
இசை மற்றும் கலைகளை வளர்த்து ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ...
நல்ல கதையம்சம் கொண்ட தரமான கதைகளை தயாரிப்பதற்கு பெயர் பெற்றவர் சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் கே...