Latest News :

விழுப்புர மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய நலத்திட்ட உதவிகள்!
Saturday June-02 2018

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். மாவட்டம் வாரியாக வழங்கப்பட்டு வரும் இந்த நலத்திட்ட உதவிகளால் ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வருகிறார்கள்.

 

அதன்படி, விழுப்புர மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது.

 

விஜய் மக்கள் இயக்க விழுப்புரம் மாவட்டம் ரிசிவந்தியம் ஒன்றியம் எடுத்தனூர் கிராமத்தில் கிளை மன்ற தலைவர் திருநாவுக்கரசு - அருணா திருமண விழாவில் ரிசிவந்தியம் ஒன்றிய தலைவர் ஜெ.சுந்தரமூர்த்தி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், மருந்து தெளிப்பான் இயந்திரம் 44 பேருக்கும், விதை நெல் 100 பேருக்கும், அரிசி 2 கிலோ வீதம் 100 பேருக்கும், இலவச சேலை  300 பேருக்கும், வேட்டி 200 பேருக்கும், 600 பேருக்கு நோட்டு புத்தகங்களும், டிப்பன் பாக்ஸ் 400 குழந்தைகளுக்கும், 200 பேருக்கும் மரக்கன்றுகளும் ஆகியவற்றை அகில இந்திய தலைமை விஜய் மக்கள் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, வடக்கு மாவட்ட தலைவர் குஷி மோஹன் நகர ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related News

2711

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

அரசியல் கட்சி மாநாடு போல் நடந்த ‘லீடர்’ பட டீசர் வெளியீட்டு விழா!
Saturday March-07 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

Recent Gallery