Latest News :

தற்கொலை மனநிலையில் இருந்து எப்படி வெளிவருவது - புரிய வைக்கும் ‘புரிதல்’
Saturday June-02 2018

கடன் தொல்லை, வேலையின்மை, மன உளைச்சல், விரும்பியதை படிக்க முடியாமல் போதல், என்று பல காரணங்களுக்காக தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், அத்தகைய தற்கொலை மனநிலையில் இருந்து வெளிவருவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ள குறும்படமே  ‘புரிதல்’.

 

பிராபகரன் என்ற புதுமுகம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த குறும்படத்தில் ஹேமா, மீனல், துர்கா, ரவிச்சந்திரன், சாந்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

 

கிங்ஸ்லி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.எஸ். தரண் டி.எப்டி மற்றும் ஜம்பு ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அல்தாப் ஹுசய்ன் மற்றும் ஆனந்த் ஆகியோர் படத்தொகுப்பு செய்ய அருண் கலைப் பணியை கவனித்துள்ளார். சரோவ் டிசைன் பணிகளை கவனிக்க, 360 டிகிரி ஸ்டுடியோஸ் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை செய்துள்ளது. மக்கள் தொடர்பாளர் பணியை விஜய முரளி செய்துள்ளார்.

 

இந்த குறும்பட திரையீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன், நடிகை அனு கிருஷ்ணா, தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பன், சவுந்தர், பாடலாசிரியர் சொற்கா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் ‘புரிதல்’ குறும்படம் மூலம் தற்கொலைக்கு எதிராக சொல்லப்பட்டிருக்கும் கருத்தை பாராட்டி பேசியதோடு, இந்த குறும்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் சிவனை வெகுவாக பாராட்டினார்கள்.

 

மேலும், இதே குறும்படத்தை முழு நீளத்திரைப்படமாக எடுப்பதற்காக அறிவிப்பையும் இந்த நிகழ்வில் இயக்குநர் சிவன் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

2713

இசைக்கலைஞராக அறிமுகமாகும் ஒய் ஜி மதுவந்தி மகன் ரித்விக் ராவ் வட்டி!
Monday June-30 2025

தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

Recent Gallery