இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த், இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘முந்தல்’. அப்பு கிருஷ்ணா என்ற அறிமுக ஹீரோ நடிப்பில் உருவான இப்படம் சித்த மருத்துவத்தை மையமாக வைத்து உருவான டிராவல் அட்வெஞ்சர் படமாகும்.
திரைத்துறை நடத்தி வந்த போராட்டம் முடிந்த உடனேயே, கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘முந்தல்’ 50 நாட்களை கடந்து இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையான கதையை கையில் எடுத்த இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த், அதை ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் படமாகவும் கொடுத்தது தான் இப்படத்தின் தனி சிறப்பு. அறிமுக ஹீரோ, புதுமுக தொழில்நுட்ப கலைஞர்களோடு, தனக்கு கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் படத்தை மேக்கிங் செய்திருக்கும் ஜெயந்துக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகின்றது.
ஆரம்பத்திலேயே சென்சார் அதிகாரிகள் இப்படத்தை வெகுவாக பாராட்டியது இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்துக்கு பெரும் உற்சாகம் அளித்த நிலையில், படம் தற்போது 50 வது நாளை கடந்திருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது. தற்போதைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படம் இரண்டு வாரங்களை தாண்டி ஓடினாலே வெற்றியாக கருதப்படும் நிலையில், ‘முந்தல்’ 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.
அதேபோல், இயக்குநர்கள் சங்கம் சார்பில் இப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டு படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்தை வெகுவாக பாராட்டியுள்ளார்கள். கம்போடியா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பது குறித்து இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல இயக்குநர்கள் ஸ்டண்ட் ஜெயந்தை பாராட்டியதோடு, இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் இந்தியில் ரீமேக் செய்தால் மிகப்பெரிய வெற்றி பெறும், என்றும் கூறியிருக்கிறார்கள்.
மூத்த இயக்குநர்களின் பாராட்டு, படத்தின் வெற்றி போன்றவற்றால் மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குநர் ஸ்டண்ட் ஜெயந்த், தனது அடுத்த படத்தை பெரிய அளவில் எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது மூன்று பெரிய நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வரும் அவர், விரைவில் தனது அடுத்தப் படம் குறித்து அறிவிக்க உள்ளார்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...