தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக் கொண்ட நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் காதல் குறித்தும், காதலன் குறித்தும் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டியில் சமந்தா கூறுகையில், “நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும் போது நான் என் சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போன்று உணர்ந்தேன். நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன், ஆனால் நல்ல நேரம் எனக்கு அந்த நபரிடம் இருந்து தப்பித்துவிட்டேன்.
இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரி வாழ்க்கை மாதிரியே ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம் தான், நான் நாக சைத்தன்யாவை சந்தித்தது.” என்று தெரிவித்துள்ளார்.
சமந்தா நாகை சைதன்யாவை காதலிப்பதற்கு முன்பாக நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இருவரும் காலஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜையும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...