சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு ‘என்னோடு நீ இருந்தால்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.
நாகசரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.கே. இசையமைக்க, ராஜ்கீர்த்தி எடிட்டிங் செய்துள்ளார். எஸ்.சுப்பிரமணி கலையை நிர்மாணிக்க, கேசவன் நடனம் அமைத்திருக்கிறார். ஸ்டண்ட் ஜி ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, எஸ்.ஆனந்த் தயாரிப்பு மேற்பார்வையை கவனித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி மு.ரா.சத்யா இயக்கியுள்ளார். படம் குறித்து கூறிய இயக்குநர், “லவ் மற்றும் ரொமாண்டிக் திரில்லராக படம் உருவாகி உள்ளது. யாரிடமும் உதவியாளராக பணி புரியவில்லை, படங்களை பார்த்தது, புத்தகங்கள் எழுதும் அனுபவத்தை வைத்தே இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
இந்த படம் வெளிவந்த பிறகு பார்த்த அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் அனைவரும் இந்த சமூதாயத்தால் ஒரு முக்கியமான விஷயத்தால் நமக்கு தெரியாமலே பாதிக்கப்பட்டு வருகிறோம். அந்த பாதிப்பு என்ன ? ஏன் அவ்வாறு நடக்கிறது என்பது இந்த படம் பார்த்த பிறகு அதை உணர்த்து அதிர்சியடையும் வண்ணம் படத்தின் திரைக்கதை இருக்கும்.
படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதாமாக ரசிக்கவைக்கும். சென்சாரில் படத்திற்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது மகிழ்ச்சி. படம் ஜூன் 15 ம் தேதி வெளியாக உள்ளது.” என்றார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...