’ஹர ஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தோஷ் பி.ஜெயக்குமார், தனது முதல் படத்திலேயே ஏகப்பட்டோர்களின் விமர்சனத்தை எதிர்க்கொண்டாலும், சினிமா வியாபாரிகளால் பெரிதும் பாராட்டப் பட்டார். காரணம், அப்படம் வாரி கொடுத்த வசூல் தான்.
’ஹர ஹர மஹாதேவகி’ படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் சந்தோஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து மீண்டும் ஒரு குஜால் படத்தை இயக்க கேட்டுக்கொண்டதன் பேரில் உருவான படம் தான் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ தலைப்பு மட்டும் அல்ல முழு படத்தையும் ரொம்ப குஜாலாக இயக்கியிருந்த சந்தோஷுக்கு, முதல் படத்தை காட்டிலும் இப்படத்திற்கு எதிர்ப்புகள் ரொம்ப பலமாக இருந்தாலும், அதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை. அவர் மட்டும் அல்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவும் தான்.
இருந்தாலும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருக்கு ஆபாச பட இயக்குநர் என்ற இமேஜ் வந்துவிட்டதால் அவர் சற்று அப்செட்டாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அசராத ஞானவேல்ராஜா, குத்து படம் கொடுத்த லாபத்தால் குஷியடைந்ததோடு, மீண்டும் அப்படி ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தையும் சந்தோஷை வைத்தே எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பவர், சந்தோஷை வளைப்பதற்காக அவருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறாராம்.
தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்கும் ஞானவேல்ராஜா, அப்படத்திற்கு பிறகு குஜால் படம் தயாரிக்கலாம் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...