Latest News :

எதிரிகள் இல்லனா வாழ்க்கை போராடிக்கும் - ‘மெர்சல்’ விழாவில் விஜய் பேச்சு
Monday August-21 2017

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாக உள்ளது. அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், நேற்று மாலை சென்னை நேறு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

இதில், படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் லைவாக பாடியதோடு, ஏ.ஆர்.ரஹ்மானும் நிகழ்ச்சியில் பாடினார்.

 

நிகழ்ச்சியில் அதிரடியாகவும், தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்வது போலவும் பேசிய விஜய், “வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்கன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும், அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் நண்பா" என்று தெரிவித்தார்.

Related News

274

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery