‘கபாலி’, ‘காலா’ என்று தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்கள் இயக்கியிருக்கும் ரஞ்சித்தின் அடுத்தப் படம் என்னவாக இருக்கும், என்பது குறித்து தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, பா.ரஞ்சித் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டும், என்று அஜித் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்ததாக எந்த இயக்குநர் படத்தில் நடிக்கப் போகிறார்? என்பது பெரும் கேள்வியாக இருக்கும் நிலையில், அஜித் ரசிகர்களோ, அஜித் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும், என்று விரும்புவதோடு, புதிதாக ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து ‘காலா’ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் கேள்வி கேட்ட அஜித் ரசிகர்கள், “அஜீத்தை வைத்து பா.ரஞ்சித் படம் இயக்குவாரா? என்று கேட்டதோடு, இயக்குநர் சிவாவிடம் இருந்து அஜித்தை காப்பாற்றுங்கள், என்றும் கிண்டலடித்துள்ளார்கள்.
அஜித் ரசிகர்களுக்கு பதில் அளித்திருக்கும் சந்தோஷ் நாராயணன், “அஜித்தை இயக்க ரஞ்சித் விரும்புவதாக கூறியதோடு, கடின உழைப்பாளியான இயக்குநர் சிவா குறித்து தவறாக பேசாதீர்கள்” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...