கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்த ‘விஸ்வரூபம்’ கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. வெளியாவதற்கு முன்பாக மிகப்பெரிய சர்ச்சையில் இப்படம் சிக்கினாலும், கமல்ஹாசன் தயாரித்த படங்களிலேயே மிகப்பெரிய வெற்றிப் பெற்ற படம் என்ற பெயர் எடுத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே படமாக்கிய கமல்ஹாசன், எஞ்சி இருந்த பணிகளை விரைவாக முடித்தாலும் படத்தை ரிலீஸ் செய்ய சரியான தருணத்தை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன், படத்தை விரைவில் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலரை வரும் ஜூன் 11 ஆம் தேதி வெளியிடப் போவதாக கமல்ஹாசன், இன்று அறிவித்திருக்கிறார். டிரைலரை கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் வெளியிடப் போகிறாராம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...