’வாணி ராணி’ சீரியலில் நடித்து வரும் பிரித்விராஜ், அந்த சீரியலில் பணிபுரியும் உதவி இயக்குநரை அடித்த சம்பவம் சீரியல் ஏரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்க, இதே மாதிரி ஒரு சம்பவம் ‘ராஜா ராணி’ சீரியலிலும் நடந்திருக்கும் தகவலும் கசிந்திருக்கிறது.
மக்களிடம் வரவேற்பு பெற்ற சீரியலான ‘ராஜா ராணி’ சீரியலில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவும், அந்த சீரியலில் பணிபுரியும் உதவி இயக்குநர் ஒருவரை அடித்துவிட்டாராம். ஆனால், அந்த உதவி இயக்குநருக்கும் அவருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லையாம். இருந்தாலும் சஞ்சீவ் அடிதடியில் இறங்கியதற்கு காரணமே சீரியலின் நாயகி ஆல்யா மானஸா தானாம்.
உதவி இயக்குநருக்கும் ஆல்யா மானசாவுக்கும் தான் வாக்கு வாதம் நடந்ததாம். இடையில் புகுந்த சஞ்சீவ், மானஸாவுக்கு சப்போர்ட்டாக பேசியதோடு, ஒரு கட்டத்தில் உதவி இயக்குநரை அடித்து தள்ளிவிட்டு விட்டாராம்.
தற்போது, இந்த தகவலை முன்னணி வார இதழ் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதே சமயம், அந்த நாளிதழ் இது குறித்து சஞ்சீவிடம் கேட்டதற்கு, “உங்களிடம் இதை கூறியவரிடம் ஆதாரம் இருக்கிறதா என்று கேளுங்கள்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம்.
ஏற்கனவே காதல் விவகாரத்தில் சஞ்சீவ் - ஆல்யா மானசா பெயர் வைரலாகி வரும் நிலையில், தற்போது இந்த தகவலாலும் இந்த ஜோடி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறார்கள்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...