உலகப் புகழ் பெற்ற பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆண்டனி பெளர்டன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆண்டனி பெளர்டன் ‘பார்ட்ஸ் அன்நவுண்ட்’ (Parts Unknown) என்ற நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானார். சமையல் கலைஞரான இவர் உலகம் முழுவதும் பயணித்து அனைத்து நாடுகளிலும் பிரபலமான உணவு வகைகளை காட்டுவது போல நிகழ்ச்சி நடத்தி வந்தார்.
சி.என்.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த உணவு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற அவர், ஓட்டல் அறையில் இறந்து கிடந்துள்ளார். அவர் உடலை பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

61 வயதாகும் ஆண்டனி பௌர்டன் இத்தாலியை சேர்ந்த நடிகை Asia Argento என்பவரை காதலித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...