Latest News :

இண்டர்நேஷ்னல் டானாக நடிக்கும் விஜய் சேதுபதி!
Monday August-21 2017

‘விக்ரம் வேதா’ படத்தில் சென்னை தாதாவாக கலக்கிய விஜய் சேதுபதி, அடுத்ததாக இண்டர்நேஷ்னல் டானாக நடிக்கிறார்.

 

தொடர் வெற்றி ஹீரோவாக கோடம்பாக்கத்தில் வலம் வரும் விஜய் சேதுபதியை ரசிகர்களிடம் கொண்டு சேர்ந்த படங்களில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா’ படம் மிக முக்கியமான படமாகும். அப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியிலேயே இரண்டாம் பாகத்திலும் நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்தார்.

 

ஆனால், அப்படத்தின் இயக்குநர் கோகுல், ‘காஷ்மோரா’ படத்தை இயக்கியதால் இரண்டாம் பாகம் எடுக்கப்படவில்லை. 

 

இதற்கிடையே மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து கோகுல் இயக்கும் படத்திற்கு ‘ஜூங்கா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் எமி ஜாக்சன் டூயட் பாடுகிறார். இதற்கான பேச்சு வார்த்தை முடிடியும் தருவாயில் உள்ளது. மேலும், இப்படத்திற்காக விஜய் சேதுபதி பாரிஸ் பயணிக்க உள்ளார். இதற்கு முன்பாக பாடல் காட்சிகளுக்காக வெளிநாட்டுக்கு பயணித்த விஜய் சேதுபதி, முதல் முறையாக பட காட்சிக்காக வெளிநாட்டுக்கு பயணப்படுகிறார்.

 

சாதரணமாக இருக்கும் விஜய் சேதுபதியை இப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக காட்டப் போகிறாராம் இயக்குநர் கோகுல். காரணம் அவர் இப்படத்தில் இண்டர்நேஷனல் டானாக நடிக்கிறாராம்.

Related News

276

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery