நடிகர்கல் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நேரடியாக அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு வர இருக்கும் தேர்தல் பெரும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயமத்தில், அதிகமான ரசிகர்கள் உள்ள நடிகர் விஜயும் சத்தமில்லாமல் அரசியல் காய்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் அழுத்தமாக கால்பதிக்க நினைக்கும் பாரதீய ஜனதா கட்சி, தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்திய அளவில் சினிமா பிரபலங்களை சந்தித்து அவர்களது ஆதரவையும் கேட்டு வருகிறது.
பாலிவ்டு நடிகர் சல்மான் கானை பா.ஜ.க தலைவன் நிதின் கட்கரி சந்தித்து பேசியதோடு, பா.ஜ.க-வின் சாதனை புத்தகத்தையும் வழங்கினார்.
இந்த நிலையில், ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரையும் பிரதமர் மோடி நேரடியாக சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த தேர்தலின் போது கூட பிரதமர் மோடி ரஜினிகாந்த் மற்றும் விஜயை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...