ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜயின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி வருகிறது. தனது பிறந்தநாளின் போது அன்றைய தினம் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரத்தை பரிசாக வழங்கி வருகிறார்.
அதுமட்டும் இன்றி, விஜயின் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடி வருவதோடு, ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளையும் வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பல பெரிய திட்டங்களை ரசிகர்கள் போட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என்று விஜய் முடிவு எடுத்திருக்கிறாராம்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் இந்த வருட பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்யும்மாறு தனது ரசிகர் மன்றங்களுக்கும் விஜய் உத்தரவிட்டுள்ளாராம். இது அவரது ரசிகர்களுக்கு ஒருபக்கம் சோகத்தை ஏற்படுத்தினாலும், தூத்துக்குடி மக்களுக்காக என்பதில் விஜயின் முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளார்கள்.
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...
தமிழ் சினிமா கலைஞரான ஒய் ஜி மகேந்திரன் குடும்பத்திலிருந்து மற்றுமொரு வாரிசு இசைக்கலைஞராக திரைத்துறையில் கால் பதித்துள்ளார்...
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...